தளபதி முதல் டி.ராஜேந்தர் வரை பொது இடங்களில் கதறி அழுத 7 பிரபலங்கள்.. திரும்பி பார்க்க வைத்த சம்பவங்கள்!

பல நடிகர்கள் பொது இடங்களில் அழுதுள்ளனர், ஒரு சில நடிகர்கள் ரசிகர்களுக்காகவும், பல நடிகர்கள் படத்தின் பிரச்சனைகாகவும் கண்ணீர் வடித்துள்ளனர். எந்தெந்த நடிகர்கள் பொது இடங்களில் அழுதுள்ளார் என்பதை இப்போது பார்ப்போம்.

தளபதி விஜய்: நடிகர் விஜய் படத்தில் நடிக்கும் எமோஷனல் விட நிஜ வாழ்க்கையில் மிகவும் அதிக எமோசனல் உடையவர். அப்படித்தான் தனது ரசிகர் மன்றத்தில் இருந்த ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததை கேட்ட விஜய் உடனடியாக அங்கு சென்று அனைவரும் முன்னிலையில் தன்னையே அறியாமல் தன் ரசிகனுக்காக கண்கலங்கினார்.

vijay
vijay

அதுமட்டுமில்லாமல் தலைவா படம் வெளி வராததை கண்டித்து ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்டார். இதற்காகவும் நடிகர் விஜய் பிரபல ஊடகத்தில் தொகுப்பாளர் ஒருவர் தலைவா படம் வெளிவருவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளீர்கள். உங்களுக்கு எது கஷ்டமாக இருந்தது எது என கேட்டபோது அதற்கு விஜய் ரசிகன் தற்கொலை செய்து கொண்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என தெரிவித்து கண்கலங்கினார்.

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஒரு சில வெற்றிகள் கண்டவுடன் புகழின் உச்சத்திற்கு சென்றதால் ஒரு சில மாதங்கள் கொஞ்சம் மிதப்பாகவே இருந்தார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் புகழின் உச்சத்திற்கு சென்றதால் தயாரிப்பாளருடன் படங்களில் நடிப்பதற்கு கண்டிசன் போட்டார்.

sivakarthikeyan
sivakarthikeyan

ஒரு சில தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு டார்ச்சர் செய்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவகார்த்திகேயன் ரெமோ ஆடியோ வெளியீட்டு விழாவில் எனக்கு எத்தனை பிரச்சினையை கொடுப்பீர்கள் என அனைவரும் முன்னிலையிலும் அழுதுள்ளார்.

விஜயகாந்த்:  நடிகர் விஜயகாந்த் பல படங்களில் எமோஷனல் காட்சிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் கால் பதித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கலைஞர் இறப்பு செய்தியை கேட்டதும் வெளிநாட்டில் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்த் வீடியோ கால் செய்து அனைவர் முன்னிலையிலும் அழுதுள்ளார்.

அருண் விஜய்: அருண் விஜய் பல படங்களில் நடித்தும் அவருக்கு பெரிய அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றியை கொடுக்கவில்லை. அப்போது அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்கள் வில்லனாக நடித்த அருண் விஜய்யை பாராட்டினர். அப்போது திரையரங்கிலிருந்து வெளிவரும்போது அனைவரும் முன்னிலையிலும் அருண் விஜய்யை அழுதுள்ளார்.

ராகவா லாரன்ஸ்: ராகவா லாரன்ஸ் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அங்கு கூடியிருந்த கூட்டத்தில் பலருக்கும் போலீசாரால் பல காயங்கள் ஏற்பட்டது அப்போது அனைவரும் முன்னிலையிலும் ரசிகர்களுக்காக அழுதுள்ளார்.

உறியடி ஹீரோ: விஜய் குமார் உறியடி படத்தை நடித்து இயக்கியும் உள்ளார். இப்படத்திற்காக பல கஷ்டங்கள் சந்தித் உள்ளதால் மனம் தாங்காமல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவரும் முன்னிலையில் தன்னை அறியாமல் அழுதார்.

டி ராஜேந்தர்: ராஜேந்திரன் அவரது இளைய மகன் திருமண விழாவிற்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அனைவரின் முன்னிலையில் கண் கலங்கினார். மேலும் நான் பல காதல் படங்கள் எடுத்துள்ளேன் அப்படியிருக்கும்போது என் மகன் காதலுக்கு நான் எப்படி எதிர்மாறாக இருப்பேன் என கருத்து தெரிவித்து கண்கலங்கினார். அவர் கண்கலங்கியதற்கு காரணம் சமூக ஊடகங்களில் இளைய மகன் திருமணத்திற்கு டிஆர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தகவல் வைரலானது அதனால் தான் டிஆர் கண்கலங்கினார்.

t rajendar
t rajendar
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்