Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg-boss-5-tamil-love

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நமிதாக்கு பதிலாக பிக்பாஸ் வரும் பிரபலம்.! இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லையே

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியேறுவதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நடிகை சகிலாவின் மகளான திருநங்கை மிலா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரசிகர்கள் பலரும் மிலா பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத போட்டியாளராக நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். மிலா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாக இருந்தது.

ஒரு திருநங்கை வீட்டிற்கு செல்வதால் மீண்டும் ஒரு திருநங்கை அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் மிலா செல்லவில்லை என்ற கருத்து நிலவி வந்தது.

தற்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் நமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மிலா வீட்டிற்குள் நுழைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மிலாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல ஆர்வமாக இருப்பதாகவே கருத்துக்களை தெரிவித்தார்.

sakeela-daughter-mila-cinemapettai

sakeela-daughter-mila-cinemapettai

Continue Reading
To Top