Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘சைக்கோ இயக்குனர் மிஷ்கினுடன்’ என்ற தலைப்பில் போட்டோ வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் !
சைக்கோ
இயக்குனர் மிஷ்கின் இணையும் படத்திற்கு இந்த வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கின்றனர். இளையராஜா இசை . ஒளிப்பதிவு பி சி ஸ்ரீராம். நேற்று முன் தினம் இப்படத்தின் டைட்டில் லோகோ வெளியானது.

PYSCHO
அல்ப்பிரேட் ஹிட்ச்காக் இயக்கத்தில் 1960 இல் வெளியான படம் தான் சைக்கோ . இப்பதான் நாவலின் அடிப்படியில் உருவாக்கப்பட்ட ஒன்று. அன்றும் இன்றும் , என்றுமே திரில்லர் படங்களுக்கு உதாரணமாக சொல்லப்படும் படம். இப்படத்தின் தலைப்பின் ஸ்டைலில் தான் நம் தமிழ் தலைப்பு லோகோவும் வெளியானது.
எனவே இந்த புதிய படம் கண்டிப்பாக மனோதத்துவ சம்பந்தமான சஸ்பென்சஸ் திரில்லர் என்பது நிரூபணமாகி விட்டது. இப்படத்தில் உதயுடன் இயக்குனர் ராம், அதிதி ராவ் , நித்யாமேனன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
End of 1st day shoot! With my #Psycho director #Mysskin?@pcsreeram sir ! ?? pic.twitter.com/wFScOOwbYd
— Udhay (@Udhaystalin) September 7, 2018
இந்நிலையில் முதல் நாள் ஷூட்டிங் முடிவடைந்தது என்று உதய் இயக்குனருடன் உள்ள போட்டோவை ட்விட்டரில் அப்லோட் செய்துள்ளார்.

myskin udhay
இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது .
