Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிக்டாக் பார்த்து எனக்கு நானே சூனியம் வச்சுகிட்டேன்.. வருத்தப்பட்ட பிரபல நடிகர்
இயக்குனர் சிங்கம்புலி நடிகராக அவதாரம் எடுத்து தற்போது பல படங்களில் நகைச்சுவை ரோலில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்திலும் முக்கிய வேடத்தில் சிங்கம் புலி நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான விளம்பர பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சைகோ படத்தில் நடித்த சிங்கம் புலி படத்தின் இயக்குனர் மிஸ்கின் குறித்து பேசுகையில், மிஸ்கின் தனது ஒரு படத்தை மட்டும் பார்த்து விட்டு தான் என்ன நடிக்க அழைதார்.
அப்போது என்னிடம் மிஸ்கின் கூறும்போது இந்த படத்தில் உங்களுக்கு வசனங்கள் மிக குறைவு என்றார். நான் அவருடைய படங்களை பார்த்து அவரைப்பற்றி பிரிந்து வைத்திருந்ததால் உடனே சைக்கோ படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று கூறினார் .
இந்நிலையில் டிக்டாக் ஆப் மோகம் குறித்து பேசிய சிங்கம்புலி தனக்கு அந்த ஆப் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷத்தை தந்தது என்றார். டிக்டாக்கில் தான் அதிக நேரம் செலவிட்டதாக கூறிய சிங்கம் புலி. தன்னை ஒருவர் டிக்டாக் செய்வதை கண்டு வியந்து நேரில் அழைத்து பாராட்டினேன் என்றார்.
ஆனால் கடைசியில் அந்த பையனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது. அப்புறம் அந்த பையன் என்னை போலவே சினிமாவில் நடித்து வருகிறார். ‘என்னடா இது நமக்கு நாமே சூனியம்’ வைத்தது போல் ஆகிவிட்டது என்று சிங்கம்புலி வருத்தப்பட்டார்.
