fbpx
Connect with us

Cinemapettai

டிசம்பர் திகில் கிளப்பும் சைக்கோ.. வெளிவந்த ரிலீஸ் தேதி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிசம்பர் திகில் கிளப்பும் சைக்கோ.. வெளிவந்த ரிலீஸ் தேதி

வரும் டிசம்பர் மாதத்தில் மிஸ்கின் டைரக்ட் செய்த சைக்கோ திரைப்படம் ரிலீசாக இருப்பதாகவும் ரிலீஸ் தேதி என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஒரு தனித்துவமான டைரக்டர் மிஸ்கின். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தனி திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது உதயநிதி நடிப்பில் சைக்கோ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சைக்கோ படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் உதயநிதி மற்றும் நாயகிகளாக நித்யா மேனனும் அதிதி ராவ்வும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படத்தின் டீஸர், சிங்கிள் டிராக் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் சைக்கோ படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. உதயநிதியின் திரைப்பயணத்தில் இப்படம் மிக முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைக்கோ உன்ன நெனச்சி பாடல்:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top