Tamil Cinema News | சினிமா செய்திகள்
அன்றும் சரி இன்றும் சரி நான்தான் ராஜா.. சைக்கோவில் இசைஞானியின் அற்புதம்
அன்றிலிருந்து இன்றுவரை இளையராஜாவின் சகாப்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது பரவாயில்லை ஆனால் முன்பிருந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் இசையமைப்பாளர்கள் இல்லை. அதனால் இசையமைப்பாளர் இளையராஜா இசை சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் என்று சில கூட்டம் சொல்லும்.
ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் யூடியூப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பல பேர் இசையமைப்பாளர்களாக போட்டி போட்டுக்கொண்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்த டெக்னாலஜி வைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் இசை அமைக்கலாம் என்ற பார்வை உள்ளது. ஆனால் இளையராஜா இதற்கும் போட்டி போட்டுள்ளார். அதாவது எந்த டெக்னாலஜி வந்தாலும் இசை இன்ஸ்ட்ருமென்டடில் இருந்து மட்டும் வருவதல்ல. இசையை உருவாக்க வேண்டும் என்பது அவரது பாணி.
அந்த பாணியில் சைக்கோ படத்திற்காக இசையை உருவாக்கி வைத்துள்ளார். மிஸ்கின் கூட்டணி என்று வரும்பொழுது கண்டிப்பாக பாடல்கள் குறைவாக இருக்கும். அதேசமயம் தரமான பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் உன்ன நெனச்சேன் பாடல்கள் போல் தற்பொழுது சைக்கோ படத்திற்காக ‘உன்ன நெனச்சி நெனச்சி’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இதோ அந்தப் பாடல்
சைக்கோ பாடல்:
