fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் விஜய்யின் குருவி படத்தை கிண்டல்.. அசிங்கப்படுத்திய நாடக நடிகை

kuruvi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் விஜய்யின் குருவி படத்தை கிண்டல்.. அசிங்கப்படுத்திய நாடக நடிகை

தமிழ் சினிமாவில் பெரிய அளவு வியாபாரம் உள்ள நடிகராக உருமாறி இருப்பவர் தளபதி விஜய். சாதாரணமாக விஜய் படம் 200 கோடி வரை வியாபாரம் மட்டுமே நடக்கிறது என்றால் அது அவருடைய வளர்ச்சிக்கு சான்றாகும். இதை அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை தான்.

நடிகர்களுக்கு மோசமான காலகட்டம் என்பது உண்டு. எந்த மாதிரி படங்கள் நடித்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறாது. ரஜினிகாந்தை தவிர மற்ற அனைவருக்குமே இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு காலகட்டத்தில் விஜய், திரிஷா, விவேக் நடிப்பில் தரணி இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் குருவி. கில்லி படத்திற்கு பிறகு தரணி விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படம்.

இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்ததாக அப்பொழுதே பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தன. இருந்தாலும் படம் 100 நாட்கள் ஓடியதாக பத்திரிகைகளில் விளம்பரம் வந்துள்ளது. அதனை சமீபத்தில் அசுரன் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகர் பவன், தளபதி விஜய் நேரடியாக கலாய்த்து இருந்தார். பவனும் குருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து தற்போது சைக்கோ படத்தில் டீச்சராக நடித்த ப்ரீத்தம் என்பவர் தளபதி விஜய்யை நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கதைக்காக நாயகர்கள் தேவைப்பட வேண்டுமே தவிர நாயகர்களுக்காக கதை இருக்கக்கூடாது. அப்படித்தான் குருவி, காக்கா என்றெல்லாம் படத்துக்கு பேரு வச்சாங்க, படம் ஓடியதா என ஒரே போடாக போட்டு விட்டார்.

இதனால் விஜய் ரசிகர்கள் சற்று கடுப்பாகி உள்ளனர். ரேச்சல் பிரீதம் என்பவர் 40 வருடங்களாக நாடக நடிகையாக பணியாற்றி வருகிறார். மேலும் இளைஞர்களுக்குப் நடிப்பு சொல்லித் தரும் வேலையையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top