சோழ வம்சத்தை கருவறுக்கும் வீரபாண்டியன் ஆபத்துதவிகள்.. பொன்னியின் செல்வன் எக்ஸ்கிளூசிவ் வீடியோ

நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மணிரத்தினம் இயக்கி இருக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

கல்கியின் எழுத்தில் புதினமாக வெளிவந்த பொன்னியின் செல்வனை MGR முதல் கமல் வரை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தனர். கோலிவுட்டின் நீண்ட நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வனை மணிரத்தினம், எழுத்தாளர் ஜெயமோகனின் உதவியோடு படமாக எடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட 570 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

Also Read: ஜெயம் ரவி கேரக்டருக்கு இப்படி ஒரு டிவிஸ்ட்டா.. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கதாபாத்திரங்கள் அறிமுகம், டீசர், ஆடியோ வெளியீடு, ட்ரைலர் என படத்திற்கு அடுத்தடுத்து ஹைப் ஏறிக்கொண்டே இருந்தது. இப்போது போஸ்ட் ப்ரொடக்சன் முடிந்த நிலையில் படக்குழுவும் ப்ரமோஷன் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறது. இப்போது பொன்னியின் செல்வனின் மெயின் வில்லன்களான வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் பற்றிய எக்ஸ்கிளூசிவ் வீடியோ வெளியாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் சோழர்களின் ஆட்சிக்காலம் பொற்காலம் ஆக மாறுவதற்கு முந்தைய காலகட்டம். அப்போது சோழர்களுக்கு மிகப்பெரிய எதிரிகள் என்றால் அது பாண்டியர்கள் தான். பொன்னியின் செல்வன் கதையில் செவ்வூர் போர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சொல்ல போனால் மொத்தக்கதையின் காரணமும் இந்த போரில் தான் இருக்கிறது.

Also Read: மணிரத்தினத்தின் மொத்த வசூல் டார்கெட்டும் இதுதான்.. பான் இந்தியா ரிலீஸ் எல்லாம் சும்மா கண் துடைப்பு

சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் இந்த போரில் தான் பாண்டிய மன்னன் வீர பாண்டியனின் தலையை கொய்து விடுவான். இதனால் சோழனை கருவருத்தே ஆக வேண்டும் என வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் உறுதிமொழி எடுத்து சோழநாட்டில் புகுந்து விடுவார்கள். இந்த கூட்டத்தின் ராணியாக இருப்பவள் தான் நந்தினிதேவி.

அனைவரும் எதிர்பார்த்த பாண்டிய ஆபத்துதவி ரவிதாசனாக கிஷோர் நடித்திருக்கிறார். ரியாஸ் கான் வேளாளராக நடித்து இருக்கிறார். இவர்கள் காடுகளில் பதுங்கி நந்தினியின் கட்டளைக்காக காத்திருப்பவர்கள். நந்தினி தேவி அரண்மனையில் உள்ளே இருந்தே ஆதித்ய கரிகாலனின் கடைசி நாளுக்காக காத்திருப்பாள்.

Also Read: ஜெயம்ரவியால் விலக்கப்பட்டாரா சிம்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்