பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாய் தனது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் நேற்று வையாபுரி போட்டியிலிருந்து வெளியேறினார்.

அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்த கமல் அவர்கள் “நான் நடிக்கும்போது அந்த காட்சி நன்றாக வந்தாலும் மீண்டும் ஒரு டேக் எடுத்துக் கொள்வேன். எனக்கே தோன்றும் ‘ஹே ச்சி ரொம்ப ஓவரா நடிக்காத’ என்று.

சில பேர் சொல்கிறார்கள் பிக் பாஸில் அழுவது எல்லாம் நடிப்பு என்று. நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன் இந்தியாவில் மிகப் பெரிய நடிகைகள் பல பேரை எனக்கு தெரியும் அவர்களில் யாராவது ஒருவரை இப்போது பிந்து மாதவி அழுதது போல் நடித்துக் காட்ட சொல்லுங்கள் பார்ப்போம்.

kamal-dhanush
kamal-dhanush

அப்படி நடித்துக் காட்டிவிட்டால் பிக் பாஸில் போலியாக நடிக்கிறார்கள் என்று நான் ஒப்புக் கொள்கிறேன். நிருபிக்க முடியுமா இது என் சவால்” என்று கூறினார்.

வையாபுரியின் பிரிவினால் பிந்து மாதவி அழுதது அந்த அளவிற்கு இயற்கையாய் இருந்தது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அதெல்லாம் சரி நம்ம சிநேகன் தொட்டதுக்கெல்லாம் அழுகுறாரே அவரை என்ன செய்யுறது?