Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..
இந்திய அளவில் தமிழ்நாட்டு பெருமை சேர்த்த பா.ரஞ்சித்…
சமீபத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நயன்தாரா மற்றும் பா.ரஞ்சித் இடம்பெற்றுள்ளனர். ஒரு வருடம் முடிந்த பிறகு சிறந்த படம், சிறந்த இயக்குனர் என கருத்துக் கணிப்பு நடத்தப்படும் ஆனால் GQ.நிறுவனம் மக்கள் மத்தியில் யார் செல்வாக்கு மிக்க நபர்கள் என கருத்துக்கணிப்பு எடுத்துள்ளனர்.
அதில் நயன்தாரா, இயக்குனர் ரஞ்சித், பார்வதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்களாக இடம்பெற்றுள்ளனர். பார்வதி மீட்டு பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த பட்டியலில் டாப்சியும் இடம்பெற்றுள்ளார்.
இவர் குறிப்பாக தனுஷ் நடித்த ஆடுகளம் மூலம் பிரபலமானவர். ஆனால் தற்போது இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் இவருக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.இயக்குனரான பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டாரை வைத்து ‘காலா’ என்ற ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதுமட்டுமல்லாமல் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரித்து மிகப்பெரிய சாதனை படைத்தார்.
