சென்னை மணலியில் தனது பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திருட்டு விசிடியை தயாரிப்பாளர் சங்கத்தினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியதற்காக, தன் மீது நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக விஷால் கூறினார்.

இதனிடையே சென்னை வடபழனியில் உள்ள காமராஜர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட துணை நடிகர்கள், தேர்தலின் போது விஷால் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினர்.

இதனிடையே, சங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, துணை நடிகர்கள் அளித்த புகார் தொடர்பாக பேசிய அவர், புகார் தெரிவிப்பவர்கள் அதற்கான ஆதாரமிருந்தால், அதனை நிரூபிக்கட்டும் எனத் தெரிவித்தார்.