உலகத்தையே கடந்த சில நாட்களாக ரான்சம்வேர் என்ற வைரஸ் இணையவழியாக கணினிகளில் பரவி வருகின்றது. இந்த வைரசால் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கு அமெரிக்காதான் காரணம் என்று ரஷ்யா நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றது. இந்த வைரசால் வங்கிப் பணிகள் அதிகளவு பாதிப்படைந்துள்ளது.

இதிலிருந்து எப்படி கணினியை பாதுகாக்கலாம்:

ஒருவருடைய கணினிக்கு இமெயில் மூலமாக தான் ரான்சம்வேர் வைரஸ் அதிகளவு பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத ஐடியில் இருந்து வரும் இ-மெயிலைத் ஓபன் செய்யாமலே இருந்தாலே அது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

அதே போன்று முன் பின் தெரியாதவர்கள் மெயில் ஐடியில் இருந்து ஏதாவது வந்தாலும் மெயில் ஓபன் செய்வதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு முறை மெயில் திறந்ததுமே ரான்சம்வேர் தன்னோட வேலையைக் காட்டத் துவங்கிவிடும். ஒரு சில நேரங்களில், வங்கியின் பெயரில் கூட, ரான்சம்வேர் பரப்பும் மெயில்களை அனுப்புவதை ஹேக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஆன்ட்டி-வைரஸ் அடிக்கடி கணினியில் அப்டேட் செய்வது அவசியம். எனவே ஆன்ட்டி-வைரஸ் லேட்டஸ்ட் வெர்சனை அப்டேட் செய்வது இன்னும் கூடுதல் பாதுகாப்பை தரும். அதே போன்று கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்வது நல்லது. ஒருவேளை ரான்சம்வேர் உங்களது கணினியைத் தாக்கினால் ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வேளை ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை அளித்தாலும்கூட டேட்டாவை திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது. தங்கள் கணினியில் உள்ள டேட்டாவை அடிக்கடி பென் ட்ரைவ், ஹார்டிஸ்க் போன்றவற்றில் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் கணினியில் ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகி தகவல்கள் காணாமல் போனாலும் கூட பேக்கப்பில் இருக்கம் டேட்டவை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.