டெல்லியில் கடந்த 4 ஆண்டுகள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருந்த சிறுமியை பேஸ்புக் உதவியால் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜி.பி.சாலையில் ரெட்லைட் பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 15வயதுள்ள சிறுமியை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக டெல்லி பெண்கள் ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு நபர் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் உண்மையானதா என்று முதலில் பெண்கள் ஆணையம் உறுதி செய்வதற்காக அப்பகுதிகளில் அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அந்த பதிவு உண்மையானது என்று தெரியவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  நடிகை பாவனாவை தொடர்ந்து..பிரபல பாடகி காரில் கதற..கதற... பரபரப்பு.!

இதனையடுத்து பெண்கள் ஆணைய அதிகாரிகள் டெல்லி போலீசார் உதவியுடன் ரெட்லைட் பகுதிக்கு சென்று அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறுமியை மீட்டனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த சிறுமி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பெற்றோர்கள் இறந்துவிட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், தான் 11 வயதில் அத்தை வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் டெல்லிக்கு கடத்தி சென்று விபச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளனர் என்று சிறுமி தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னதாக ரெட்லைட் பகுதிக்கு ஒரு நபர் வந்துள்ளார். சிறுமியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எப்படியாவது சிறுமிமை மீட்டு உறவினர்களிடம் சேர்த்துவிட முடிவு செய்து அங்கிருந்து தப்பித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  மிரட்டலான அதிரடியில் Mission: Impossible - Fallout (2018) ப்ரோமோ வீடியோ.!

ஆனால், இதனை தெரிந்துகொண்ட விபச்சார கும்பல் சிறுமியையும் அந்த நபரையும் கடுமையாக தாக்கியதுடன் இருவரையும் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்த நபர் தன்னிடம் செல்போன் இருப்பதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து பெண்கள் ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்தில் தன்னையும் ஒரு சிறுமியையும் விபச்சார கும்பல் கடத்தி வைத்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்துதான் சிறுமியும் அந்நபரும் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.