தக்லைஃப் லாபமே இத்தனை கோடியா? கமல், மணிரத்னம் கூட்டணி போடும் லாபக் கணக்கு!

நாயகன் என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பின் உலக நாயகன் கமல்ஹாசன் 37 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் படம் தக்லைஃப். இப்படம் கமல்ஹாசனின் 234 வது படமாகும். இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து த்ரிஷா, ஜெயம்ரவி, துல்கர்சல்மான், சிம்பு, கார்த்திக் ஜோஜு, அபிராமி, கெளதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்கமல் பிலிம் இண்டர் நேசனல் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸுடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனும் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் தாங்கள் எப்படியாவது மணிரத்னம் படத்தில் நடித்துவிட வேண்டும், என்பதைக் கனவாகவே வைத்துள்ளனர். முப்பதாண்டுகளுக்கும் மேலான சினிமாவில் தனக்கென தனி பாணியில் செயல்பட்டு வரும் மணிரத்னம் பல புதிய இயக்குனர்களுக்கு முன்னோடியாகவும், இப்போதைய இயக்குனர்களுக்கு டஃ கொடுக்கும் வகையில், லைகா தயாரிப்பில், பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக பிரமாண்டமாக எடுத்து முதல் பாகத்தில் வசூல் சாதனை படைத்துக் காட்டினார்.

இந்த நிலையில், தக்லைஃப் அப்டேட் எப்போது வருமென்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தீனி போடும் வகையில் இன்று, தக்லைஃப் படக்குழு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், பல கட்டங்களாக ஷூட்டிங் நடந்து வந்தன…இந்த நிலையில் இன்றுடன் முழு படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.

இப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன: அதில், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் இதுவரை எந்தவொரு தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் ரூ. 149.7 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், இப்படத்தின் ஹீரோவும், இயக்குனரும் இப்படத்தின் சம அளவுஉரிமையுள்ள தயாரிப்பாளர்கள் எனவும், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதால், இதன் தியேட்டர் கலெக்சன் மற்றும், சேட்டிலைட் ரைட்ஸ் இதெல்லாம் லாபம் என்று கூறப்படுகிறது. கமல் மற்றும் மணிரத்னம் இப்படம் மூலம் தலா ரூ.150 கோடி பெறலாம் என்று ஒரு தொழிலதிபர் கூறியுள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் கலெக்சனானால் தலா ரூ.250 கோடிவரை அள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக அதிகப் பணத்தை முன் கூட்டியே எடுப்பதைக் காட்டிலும், பெரிய ஹீரோக்கள் சினிமாவில் பங்க்கு தாரர்களாக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இவர்கள் இருவரிடம் இருந்து கோலிவுட் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் இரு சினிமா லெஜண்டுகள் இணைந்துள்ள தக்லைஃப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதை இப்படக்குழு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News