தனுஷால் புலம்பித் தவிக்கும் நயன்தாரா.. நாலாபக்கமும் “கேட்” போட்டா எப்படி.?

தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் O2. ஆக்சிஜன் என்பதை குறிக்கும் வகையில் இப்படத்திற்கு O2 என பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது. வெங்கட் பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ரிலீஸ் செய்ய உள்ளது. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவருமா என்பது பெரிய சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் இதற்கு முன்னதாக பெரிய நடிகர் என தனுஷின் மாறன் படத்தை ஹாட்ஸ்டார் ரிலீஸ் செய்தது.

ஆனால் மாறன் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ஹாட்ஸ்டார் எந்த படமாக இருந்தாலும் அலசி ஆராய்ந்து பார்த்துதான் வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதனால் நயன்தாரா இப்போது நடித்துள்ள O2 படத்துக்கு ஹாட்ஸ்டார் செக் வைத்துள்ளது.

ஏனென்றால் அவர்களுக்கு இந்த படம் எல்லா இடங்களிலும் ரீச் ஆகும் என்பதில் சந்தேகம். இதனால் O2 படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் விக்ரம் பிரபுவின் டாணாகாரன் படத்தையும் தயாரித்து உள்ளது. இது ஒரு கமர்சியல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களிடமும் இப்படம் எளிதில் சென்றடைய வாய்ப்புள்ளது.

இதனால் ஹாட்ஸ்டார் நயன்தாரா படத்தை தள்ளிவைத்து விக்ரம் பிரபுவின் டாணாகாரன் படத்தை முதலில் ரிலீஸ் செய்ய தயாராகியுள்ளது. வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் டாணாகாரன் படம் வெளியாக உள்ளது.

இதனால் நயன்தாரா இதெல்லாம் தனுஷின் மாறன் படத்தால் வந்த வினை தான் என புலம்பிக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் நயன்தாரா தற்போது அட்லீ இயக்கி வரும் பாலிவுட் படமான லயன் படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளார்.