எம்ஜிஆரை ஓவர் டேக் செய்த தயாரிப்பாளர்கள்.. அடிபணிய வைத்த விஜயகாந்த்

Actor Vijayakanth: கவிஞர் வாலி அவர்கள் ஒரு மேடையில் எம்ஜிஆர் க்கு தான் பாட்டு எழுதும் போது அளவோடு ரசிப்பவன்  ஒரு வரி முடித்து அடுத்த வரி கிடைக்காத போது, கலைஞர் வந்தார் “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று அடுத்த வரி கூறினார் என்று சொல்லும் போது எதிரியும் புகழும் படி வள்ளல் தன்மை படைத்தவர் எம்ஜிஆர் என்று புலப்படுகிறது. அப்படிப்பட்ட கொடைவள்ளல் எம்ஜிஆர்யே ஓவர் டெக் செய்தவர் விஜயகாந்த் அவர்கள்.

விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் சினிமாவில் பல வாய்ப்பு தேடி பல கம்பெனிகளில் ஏறி இறங்கியுள்ளார். சினிமாவில் கலைஞர்கள் படும் அத்துணை துயர்களையும் உணர்ந்தவர் அவர். வில்லனாக சினிமா வாழ்க்கையை தொடங்கி நடிகராக 150 படங்களுக்கு மேல் நடித்தவர். திரைத்துறையை தாண்டி அரசியல் நுழைந்து தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் இருந்து உள்ளார்.

சினிமாவில் ஒரு நாயகனை எல்லோருக்கும் பிடித்து விடுவதில்லை ஆனால் விஜயகாந்த்தை எல்லோருக்கும் பிடித்தது. படப்பிடிப்பில் ஆர்டிஸ்ட், ஜூனியர் ஆர்டிஸ்ட் என வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் “ஒரே உணவு! அளவில்லா உணவு! சமபந்தி உணவு!” என உணவு கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.

Also read: ஒரே ஒரு போன் தான், ஓடோடி வந்த விஜயகாந்த்.. பழசை மறந்த விஜய், குத்தி காட்டிய நடிகர்

அடிபணிய வைத்த விஜயகாந்த்

சினிமாவில் “அள்ளிக் கொடுத்தவர் எம்ஜிஆர்! அதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் விஜயகாந்த்!” என்று சத்யராஜ் பல மேடைகளிலும் விஜயகாந்த் பற்றி புகழ்ந்திருந்தார். தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு போது லாரி புல்லா இளநீர் கொண்டு வரச் சொல்லி தண்ணீருக்கு பதிலா இளநீரை குடிக்க சொல்வாராம். முகம் கழுவ கூட லைட்மேன்கள் இளநீர் எடுக்கும் அளவுக்கு இளநீர் நிறைய இருக்குமாம்.

நடிகர்களுக்கு வழங்கும் அதே சாப்பாடு அனைத்து கலைஞர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்வாராம். தான் வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சாப்பாட்டிற்கு வழங்குமாறு தயாரிப்பாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் இந்த கருப்பு எம்ஜிஆர். தயாரிப்பாளர்களால் இந்த கட்டளையை மீற முடியவில்லையாம்.

தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களின் உடல் ஆரோக்கியம் நலம் பெற வேண்டி பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Also read: 2023ல் வெளியான தரமான 10 படங்கள்.. ரசிகர்களால் கொண்டாடப்படும் போர் தொழில், குட் நைட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்