Tamil Cinema News | சினிமா செய்திகள்
தயாரிப்பாளர்களை கதறவிடும் யோகி பாபு.. நீங்களா இப்படி பண்றீங்க, நம்ப முடியல சார்!
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் மிக பிரபலம் அடைந்து விட்டால் தயாரிப்பாளர்களை சீண்டிப் பார்ப்பது நடிகர்களுக்கு ஒன்றும் புதிதான விஷயமல்ல.
ஆனால் இதை அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு மேலே வந்து ஒவ்வொரு தயாரிப்பாளரின் வாய்ப்பு கிடைத்தும் சினிமாவில் சாதித்து காட்டிய யோகி பாபு செய்வது தான் வேதனையாக உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
சமீபகாலமாக யோகிபாபு சின்ன படங்கள் மற்றும் பெரிய படங்கள் என்று பார்க்காமல் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்வது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக ஒரு நாளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் யோகி பாபு. இந்நிலையில் அவர் ஆரம்ப காலகட்டங்களில் நடித்த படங்கள் பலவும் பிரச்சனையில் சிக்கி வருகின்றது.
இந்நிலையில் அந்த மாதிரி படங்களுக்கு டப்பிங் செய்ய வேண்டும் என்றால் உடனடியாக மொத்த பணத்தையும் செட்டில் செய்து விட வேண்டும் என தயாரிப்பாளர்களை அலைய விடுகிறாராம்.
தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களை இப்படியா சோதிப்பது என சினிமா உலகமே அவர் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறதாம்.
யோகிபாபுவும் தனது தரப்பு நியாயத்தை சமீபத்தில் வீடியோவாக வெளியிட்டார். அவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த படங்களை கூட அவருடைய பெயரை பயன்படுத்தி வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
எது எப்படியோ, யோகி பாபு சமீபகாலமாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இடையே கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்து வருவதாக தெரிகிறது. இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதால் அது பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம்.
