fbpx
Connect with us

Cinemapettai

ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டு இவர் பண்ற அலப்பறை இருக்கே.. பிரபாஸ் மீது அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டு இவர் பண்ற அலப்பறை இருக்கே.. பிரபாஸ் மீது அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்!

பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸின் நடவடிக்கைகள் எதுவுமே தயாரிப்பாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என டோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

பாகுபலி படங்களுக்கு முன்னால் வரை தெலுங்கு சினிமாவில் மட்டும் நாயகனாக வலம் வந்த பிரபாஸ் அதன் பிறகு உலகமே அறியப்படும் நாயகனாக மாறி விட்டார்.

அதற்கு தகுந்தாற்போல் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வசூலைக் குவித்தது. அந்த படத்திற்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் வாங்கினார் பிரபாஸ்.

ஆனால் அதன்பிறகு நடித்த சாஹோ படத்தில் 70 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ஓரளவு வசூல் செய்ததாக நிலவரங்கள் தெரியவந்தது.

தற்போது அடுத்ததாக நடிகர் திலகம் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு 100 கோடி சம்பளம் வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.

ஏற்கனவே தற்போது பழையபடி சினிமா படங்கள் வியாபாரம் ஆகுமா என தயாரிப்பாளர்கள் சோதனையில் உள்ள நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச ஆரம்பித்துள்ளார் பிரபாஸ். இது பல தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இருந்தாலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் படங்கள் மற்றும் வசூல் ஆகியவற்றை பார்த்துத்தான் அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளத்தை நிர்ணயிக்க முடியும் என கூறி விட்டார்களாம்.

Continue Reading
To Top