Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் அதிரடி முடிவு.. கதிகலங்கிய தயாரிப்பாளர்கள்
தமிழ்சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் விஜய் சேதுபதி. ஆனால் சமீபகாலமாக இவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
விஜய் சேதுபதி பெரிதும் எதிர்பார்த்த கமர்ஷியல் படமான சங்கத் தமிழன் படம் மிகப்பெரிய தோல்வியை பெற்றது. ஆகையால் இனி சிறிது காலத்திற்கு ஹீரோவாக நடிப்பது இல்லை என முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் படத்தில் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதுவும் கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற அளவுக்கு இருந்தது.
கதாநாயகனாக நடிப்பதைவிட வில்லனாக நடிப்பதற்கு தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தருகின்றனர். இதனால் தற்போது திடீரென வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி.
அதன் தொடர்ச்சியாக தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்திலும் அவருக்கு சுமார் 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மினிமம் கேரண்டி நடிகர் என்ற பெயர் பெற்றிருந்த விஜய் சேதுபதி தற்போது அந்த லெவலில் இருந்து சற்று விலகிவிட்டதால் தயாரிப்பாளர்கள் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க யோசித்து வருகின்றனர்.
ஆனால் விஜய் சேதுபதி, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் எந்த விதமான கேரக்டராக இருந்தாலும் நடிக்க ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார். சரி, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதானே சினிமாவின் பழமொழி.
