தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தயாரிப்பாளர்களுக்கு எமனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கு செய்யும் வெட்டி செலவுக்கு இன்னும் பத்து படங்கள் கூட எடுத்து விடலாம் போல என பிரபல தயாரிப்பாளர் சமீபத்தில் புலம்பியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அதுமட்டுமில்லாமல் நம்பர் ஒன் நடிகையாக அதிக சம்பளம் வாங்குபவரும் நயன்தாரா தான். தற்போது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
சம்பளத்தோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மேக்கப்மேன் முதல் கார் டிரைவர் வரை அவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர் கணக்கில் மொய் வைத்து விடுகிறாராம் நயன்தாரா. கிட்டத்தட்ட தயாரிப்பாளர் பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் ஒரு நாளைக்கு தேவையில்லாமல் செலவு செய்யப்படுகிறதாம்.
நயன்தாராவைப் போலவே அடுத்ததாக ஆண்ட்ரியாவும் அதே வேலையைச் செய்து வருவதாகவும் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் என்பவர் சமீபத்தில் விழா ஒன்றில் பொங்கி உள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமா கொரானா பிரச்சினையில் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் இந்த நடிகைகளுக்கு பந்தா தேவையா என வெளுத்து வாங்கியுள்ளார்.
நயன்தாரா படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் தலை கால் புரியாமல் நடந்துகொண்டது கூட சமீபத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய நடிகை என்ற பெயரை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை அழிச்சாட்டியம் தான் செய்வார்களோ தெரியவில்லை என தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொள்கிறாராம்.
ஆனால் இதுபற்றி நடிகைகளிடம் கேட்டால், தயாரிப்பாளர் தேவையில்லாமல் செலவு செய்வதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா என பொறுப்பற்ற பதிலை கூறி அங்கிருந்து நழுவி விடுகின்றனர். இதனால் இனி நடிகைகளுக்கு கிடுக்கிப்பிடி போட முடிவு செய்துள்ளதாம் தயாரிப்பு தரப்பு.