சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட கல்யாண விழாவில் கோடம்பாக்கம் மொத்த திரையுலகமும் கலந்து கொண்டது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனர் மதுரை அன்பு செழியன் மகள் திருமண விழா தான் அது.
ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் என அனைவரும் கலந்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தை வருமான வரித்துறை ஒரு கண் வைத்து பார்த்துக் கொண்டுதான் இருந்தது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 10 தமிழ் பட தயாரிப்பாளர்கள் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் கணக்கில் வராத நிறைய பணம் உங்கள் கணக்கில் இருக்கிறது அதற்கு உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எப்படி சாத்தியமாகும் என்று தயாரிப்பாளர்கள் சிந்திக்கையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை அன்பு செழியன் வீட்டில் வருவாய்த்துறை சோதனை நடத்தியது அப்போது கோடிக்கணக்கில ரூபாயும், முக்கியமான ஆவணங்களும் கண்டறியப்பட்டது.
அந்த முக்கியமான ஆவணங்களில் இருந்து கிடைத்த தகவலின் படி அன்புச்செழியனிடமிருந்து நிறைய தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம் ரொக்கமாக வாங்கியுள்ளனர். அந்தப் பணத்திற்கு உண்டான வரவு செலவு கணக்குகளும், பணத்தை திருப்பிக் கொடுத்து இருந்தால் அதற்கு உண்டான கணக்கையும் சேர்த்து 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது வருவாய்த்துறை.
தயாரிப்பாளர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் மதுரை அன்புவிடமே சென்றுள்ளனர் தயாரிப்பாளர்கள். நாங்கள் வருவாய் துறையிடம் என்ன சொல்வது உண்மையை சொல்லலாமா என்று அன்புவிடமே கேட்டுள்ளனர்.அதற்கு அவர் சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டாரம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.