குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட சமந்தா.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்

Samantha: சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

ஆனாலும் இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்கள் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் திடீரென நாக சைதன்யா,சோபிதா நிச்சயதார்த்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதோடு இப்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரின் விவாகரத்திற்கான காரணம் இதுதான் என பல செய்திகள் உலாவ தொடங்கியது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சமந்தாவை பற்றி சில விஷயங்களை கூறினார்.

சமந்தாவை பற்றி தயாரிப்பாளர் சொன்ன தகவல்

சமந்தாவின் நடிப்பில் சகுந்தலம் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நீலிமா சமீபத்தில் பேட்டி ஒன்றில் சமந்தாவை பற்றி நிறைய விஷயங்கள் பேசி உள்ளார். அப்போது சகுந்தலா படத்தை பற்றி பேசுவதற்காக சமந்தாவை சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன்.

அப்போது படத்தின் கதை சமந்தாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. மேலும் அந்த சமயத்தில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொள்ளுங்கள் என்று சமந்தா கேட்டுக் கொண்டாராம்‌. இதற்கான காரணம் என்னவென்று சமந்தா கூறி இருக்கிறார்.

அதாவது அதன் பின்பு குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே நாக சைதன்யா குடும்பத்துடன் மனக்கசப்பு காரணமாக அவரது குடும்பத்தை பிரியும் முடிவை சமந்தா எடுத்துவிட்டார்.

நிம்மதியை தொலைத்த சமந்தா

Next Story

- Advertisement -