Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷால் நடவடிக்கைக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு.. சங்க தலைவர் பதவிக்கு ஆப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் கடந்த 19ம் தேதி அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இனி திரைப்படத்தின் பாடல்கள், கிளிப்பிங்ஸ், டிரைலர் தொலைக்காட்சிக்கு  இலவசமாக கொடுக்க வேண்டாம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் கடும் கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர். ஆரம்பத்தில்  விளம்பர நோக்கத்துடன் சாட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கு சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் டிரைலர், கிளிப்பிங்ஸ் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து வந்தனர்.

சங்க தலைவர் விஷால் அறிவிப்பு காரணமாக சாட்டிலைட் தொலைக்காட்சிகள் சின்ன தயாரிப்பாளர்கள் படம் குறித்த செய்தி மற்றும் தகவல்களை வெளியிட மறுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

பெரிய பட்ஜெட் பட தயாரிப்பாளர் தங்கள் வசதிக்கு ஏற்ப விளம்பரம் கொடுத்து தங்கள் படங்களை பிரபலப்படுத்தி வருவதாகவும், சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை விளம்பரம் செய்ய முடியமால்  சில தினங்களாக திணறி வருகின்றனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை சில தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்து தங்கள் பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளனர்.

அதற்கு விஷால் உங்களுக்கு மானியம் வழங்க அரசிடம் மனு அளித்துள்ளோம். அதுவரை வெயிட் பண்ணுங்கள் என கூறினராம். மேலும் வருகிற 30ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளேன்.ஆகையால் பட வெளியீடு வேலை இருந்தால் தள்ளி வையுங்கள் என அதிகார தோரணையில் கூறினராம். இதனால் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் நாம் இவரிடம் சிக்கிவிட்டோமே என பலரிடம் புலம்பி வருகிறார்களாம் பாவம் சின்ன பட தயாரிப்பாளர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top