நடிகையை பார்த்து தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்.. எல்லாத்துக்கும் ஓகே சொல்லியும் பலனில்லை

தமிழ் சினிமாவில் நடிக்க வந்து சில காலத்திலேயே பெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு ஓவர் பந்தா செய்து வந்தார் அந்த பிரபல நடிகை. அதற்கு காரணம் நடிகை அறிமுகமானது அந்த பெரிய நடிகரின் படம் என்பதால்தான்.

அதையடுத்து நடிகை மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்தார். இதனால் ஓவர்நைட்டிலேயே பிரபலமான நடிகைக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். அதனால் நடிகையும் சோசியல் மீடியாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி, புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

அதற்கு பலனாக விவாகரத்து நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் நடிகைக்கு அமைந்தது. இதனால் இனிமேல் நான் தான் நம்பர் 1 என்ற மிதப்பில் நடிகை ரொம்ப அலப்பறை செய்து வந்தார். ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக நடிகை நடிப்பில் ஓடிடியில் வெளியான அந்தப் படம் ஊத்திக் கொண்டது.

அதுமட்டுமல்லாமல் நடிகையின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்களும் தயங்கி வருகிறார்கள். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் பட்ட கஷ்டமும் பெரும்பாடு என்கின்றார்கள்.

இப்படி நடிகையின் நடிப்பு இலட்சணத்தை கண்டுபிடித்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடிகையை கண்டாலே தெறித்து ஓடுகிறார்களாம். இதனால் நொந்து போன நடிகை தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன், கவர்ச்சி காட்டுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி வருகிறாராம். ஆனாலும் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கும் நடிகையை பற்றிதான் கோடம்பாக்கத்தில் பேச்சாக கிடக்கிறது.

Next Story

- Advertisement -