Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோயினுக்கு சரிபட்டு வரமாட்டீங்க: போட்டோவை பார்த்து அனுஷ்காவை நிராகரித்த தயாரிப்பாளர்கள்
சென்னை: முதல்முறையாக ஆடிஷனில் கலந்து கொண்ட அனுஷ்காவின் புகைப்படங்களை பார்த்த தயாரிப்பாளர்கள் நீங்க ஹீரோயினுக்கு பொருத்தமானவர் இல்லை என்று கூறி அவரை நிராகரித்துள்ளனர்.
பெங்களூரில் படித்த அனுஷ்கா கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் அவர் தேவசேனாவாக நடித்த பாகுபலி 2 படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனுஷ்கா பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷ்கா
முதன்முதலாக அனுஷ்கா கலந்து கொண்ட போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சூப்பர்
அனுஷ்கா தெலுங்கு படமான சூப்பர் மூலம் நடிகையானார். அதன் பிறகு 2006ம் ஆண்டு எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான விக்ரமார்குடு படம் மூலம் பிரபலமானார்.

ராஜமவுலி
ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்த ஒரே நடிகை அனுஷ்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தேவசேனா கதாபாத்திரம் காலத்தால் அழியாத கதாபாத்திரமாகிவிட்டது.

யோகா
அனுஷ்கா நடிக்க வரும் முன்பு யோகா டீச்சராக இருந்துள்ளார். அவர் நடிகை பூமிகாவின் கணவர் பரத் தாகூரிடம் இருந்து யோகா கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
