ஜிவி பிரகாஷ் கையில் எடுக்கும் மோசமான அவதாரம்.. வளரும் முன்னரே தம்பி வாங்கும் அவப்பெயர்

ஏஆர் ரகுமானின் அக்கா மகனான ஜிவி பிரகாஷ், அவருக்கும் இசை வாடை இருக்கும் என்பதால், தமிழ் சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்தது மூலம் முதலில் இசையமைப்பாளராகவே பிரபலமானார்.

பிறகு ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து, அதன் பின் வரிசையாக தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இவர் ஹீரோவாக நடிக்கும் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவே இல்லை.

ஆனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஜிவி பிரகாஷ் வீட்டின் கதவை தட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக பல விஷயங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக ஜிவி பிரகாஷ் எந்த மாதிரி கதை என்றாலும் ஓகே சொல்கிறார். குறிப்பாக படத்தில் அடல்ட் கண்டெண்ட் அதிகமாக இருக்கிறது என்றாலும், ஜிவி பிரகாஷ் வாய்ப்பு போய்விடும் என்று கவலைப்படாமல் நடிக்கிறார். இப்படி மோசமான அவதாரம் எடுத்து, நடிக்கும் படங்கள் அவரையும், வளரும் இளைஞர்களையும் சீரழிக்கும் என்பதை பற்றி கவலைப்படுவதே இல்லை. அத்துடன் சம்பளமும் அதிகம் வாங்குவதில்லை.

இதற்குமேல் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்ன வேண்டும். நாம் சினிமா துறையில் இருக்கிறோம் என்ற ஒரு அடையாளத்தை மக்கள் மறக்காமல் இருப்பதற்கு இது உதவும் .

அதுபோக படங்களில் போட்ட காசை எப்படியாவது எடுத்து விடலாம். ஏனென்றால் இப்பொழுது அடல்ட் படங்களுக்கு கொஞ்சம் வரவேற்பு இருக்கிறது. அதனால் ஜிவி பிரகாஷின் வீட்டுக்கதவை தட்டுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்