fbpx
Connect with us

Cinemapettai

அடிமேல் அடிவாங்கும் முருகதாஸ்.. பின்வாங்கும் பிரபல நடிகர்.. அப்போ இனி ஆப்பு தான் போல

murugadoss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடிமேல் அடிவாங்கும் முருகதாஸ்.. பின்வாங்கும் பிரபல நடிகர்.. அப்போ இனி ஆப்பு தான் போல

முருகதாஸ் என்ற பெயரைக் கேட்டாலே சினிமா தயாரிப்பாளர்கள் ஆத்தாடி ஆள விடு என ஓடி விடுகிறார்களாம். அதற்கு காரணம் சமீபகாலமாக அவரது திரைப்படங்களில் உப்பு சப்பு இல்லாத கதைகளை பிரமாண்டம் என்ற பெயரில் படமாக எடுத்து தயாரிப்பாளர்களை கையேந்த வைத்து விடுகிறாராம்.

இதனால் பெரிய நிறுவனங்கள் அடியோடு முருகதாசை ஒதுக்கும் நிலைமை வந்துவிட்டது. சமீபத்தில் ரஜினிகாந்த் முருகதாஸ் கூட்டணியில் வெளியான திரைப்படம் தர்பார். பொங்கல் விடுமுறைகளில் தர்பார் மிகப்பெரிய வெற்றி எனக் கூறிக் கொண்டிருந்தவர்கள் அதன் பிறகு தர்பார் படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக விநியோகஸ்தர்கள், ரஜினி மற்றும் முருகதாஸ் வீட்டை நோக்கி படையெடுத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த தர்பார் படம் பெரிய நஷ்டம் என தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம் தெரிவித்ததாக பேட்டி கொடுத்தனர். தர்பார் படத்தின்போது முருகதாஸ் அல்லு அர்ஜுன் கூட்டணியில் ஒரு படம் இயக்க இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது தர்பார் படம் அடி வாங்கியதால் முருகதாஸ் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் பின்வாங்கியதாக தெரிகிறது.

ஏற்கனவே முருகதாஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கியிருந்தார். மகேஷ்பாபுவின் சினிமா வாழ்க்கையில் அப்படி ஒரு தோல்வியை அவர் அதற்கு முன் சந்தித்து இருக்க மாட்டார் என்பதை போல பெரிய அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல இந்த வாட்டியும் விஜய் தான் காப்பாத்தணும் போல..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top