fbpx
Connect with us

Cinemapettai

சந்தானத்துக்கு உருக்கமாக நன்றி சொன்ன தயாரிப்பு நிறுவனம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானத்துக்கு உருக்கமாக நன்றி சொன்ன தயாரிப்பு நிறுவனம்

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கெனன்யா பிலிம்ஸ், படத்தை வெளியிட உதவியதற்காக நடிகர் சந்தானத்துக்கு சிறப்பு நன்றி என தெரிவித்துள்ளது.

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘சர்வர் சுந்தரம்’. பால்கி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் 2016-ம் ஆண்டே அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது.

ஆனால், தயாரிப்பாளருக்கு படத்தை வெளியிட முடியவில்லை. அந்த அளவுக்கு பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டது. இந்தப் படத்தின் வெளியீடு பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ‘தில்லுக்கு துட்டு 2’ மற்றும் ‘ஏ1’ ஆகிய சந்தானம் படங்களுக்கு நல்ல வசூல் கிடைத்தது.

இதனால், விநியோகஸ்தர்கள் பார்வை சந்தானம் மீது திரும்பியுள்ளது. இதை முன்வைத்து ‘சர்வர் சுந்தரம்’ படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட வேண்டும் என கெனன்யா பிலிம்ஸ் போராடியது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

சர்வர் சுந்தரம் படம் வெளியாகுவதில் தயாரிப்பாளருக்கு சந்தானம் சில உதவிகள் செய்திருக்கிறார். அதன்பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஜனவரி 31-ம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்தானம் செய்த உதவிக்கு கெனன்யா பிலிம்ஸ் தனது ட்விட்டர் பதிவில் சிறப்பு நன்றி தெரிவித்துள்ளது. அந்த பதிவில் “இறைவனுக்கு, நண்பர்களுக்கு, குடும்பத்துக்கு மற்றும் நல விரும்பிகளுக்கு. நாங்கள் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை வெளியிடுகிறோம்.

படம் அனைவருக்குமான விருந்தாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பொறுமையாக எங்களுக்கு உதவிய, எங்கள் மீது நம்பிக்கை வைத்த சந்தானத்துக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top