kamal-rajini
kamal-rajini

கோலிவுட்டில் உச்ச நடிகர் என்றால் அதில் மிக முக்கியமாக இருப்பது ரஜினி, கமல். இவர்கள் இருவருமே அரசியலில் முழு மூச்சாக களம் இறங்கி விட்டார்கள், இதில் கமல் அரசியல் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார், ரஜினியோ இமயமலைக்கு சென்றுவிட்டார், ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திவிட்ட சினிமா துறையோ பெரும் சரிவை சந்தித்துள்ளது அதனால் மார்ச் 1 ம் தேதி முதல் போராட்டத்தை நடத்திவருகிறது.

சினிமாவின் அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர் சங்கம் முழு மூச்சாக இந்த போராட்டத்தை நடத்தி வருகிறது, ஆனால் முன்னணி நட்சத்திரங்கள்  இந்த போராட்டம் யாருக்கோ எவருக்கோ என நினைத்து கொண்டு முன்னணி நட்சத்திரங்கள் இதற்க்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார்கள். இதனை பற்றி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் ஜே.சதீஸ்குமார் முன்னணி நடிகரான ரஜினி, கமல் இருவரையும், இந்த திரைத்துறை பிரச்சனையை முடித்துவிட்டு அதன் பின்பு உங்கள் அரசியல் பயணத்தை தொடருங்கள் இந்த பிரச்சனையில் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது.

ரஜினி கமல் இருவரும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனால் அவர்களை இந்த நிலைமைக்கு தூக்கிவிட்ட சினிமா சின்னா பின்னமாகிக்கொண்டு இருக்கிறது நீங்கள் உங்கள் மக்கள் சேவையை தாராளமாக தொடருங்கள் ஆனால் ஏன் உங்களை வளர்த்துவிட்ட சினிமா துறைக்கு குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்.? என கேட்டார்

இந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டத்தை வெறும் கியூப்புக்காக மட்டும் கருதாமல் திரைத்துறையில் இருக்கும் பல பிரச்னைக்கு சேர்த்து ஒரே போராட்டமாக நடத்த வேண்டும் என கூறினார். மேலும் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எப்படி பட்ட ஹீரோவாக இருந்தாலும் 2 கோடி தான் சம்பளம் என நிர்ணயம் செய்யவேண்டும்.

மேலும் படம் ஓடுவதை பொறுத்து நல்ல லாபத்தை கொடுத்தால் லாபத்தில் அவர்களுக்கான சதவீதத்தை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார், இப்படி முறை படுத்தினால் தயாரிப்பாளர் நிம்மதியாக படம் தயாரிக்க முடியும், அனைவருக்கும் நல்ல லாபம் கிடைக்கும் அதேபோல் படம் ஊடா விட்டாலும் அவர்களுக்கு பெரிதாக நஷ்டம் இருக்காது என கூறினார்.

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சம்பளமே 3 கொடிதான் ஆனால் நம்ம தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்தவுடன் அடுத்த படத்திற்கு 5 கோடி சம்பளம் கேட்கிறார்கள், நாமும் அவுங்க கேட்க்கும் சம்பளத்தை கொடுத்து நம்ம தலையில நாமலே கொள்ளி வசிக்கிறோம்.அதேபோல் இயக்குனர்களும் முதல் படம் ஹிட் என்றால் அடுத்த படம் 2 கோடிக்கு மேல் கேட்கிறார்கள், ஏன் அவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்..? ஜனாதிபதிக்கே அவ்வளவு சம்பளம் கிடையாது 30 நாள் வேலை செய்வதற்கு 2 கோடி என்றால் ரொம்பவும் டூமச் ஆக இருக்கிறது.

இந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். படம் ரிலீஸ் செய்வதற்கு ஒரு வரைமுறையை கொண்டு வர வேண்டும் இந்த பிரச்னைக்கு ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக ஸ்ட்ரைக் பண்ணாமல் இந்த ஸ்ட்ரைக்லேயே அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தியேட்டரில் நடக்கும் அட்டூழியங்களையும் நமது கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

தண்ணீர், பாப்க்கார்ன்,காபி என பல தின்பண்டங்கள் விலையை 3 மடங்கு உயர்த்தி விற்பனை செய்கிறார்கள் அவற்றை எம்.ஆர்.பி ரேட்டில் விற்க வலியுறுத்தவேண்டும், அதேபோல் பார்க்கிங் கட்டணத்தையும் கட்டுக்குல் கொண்டுவரவேண்டும் மேலும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மல்டிபிளக்ஸ் மட்டுமல்லாது பி அன்ட் சி என அனைத்து திரையரங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும்.

நமது தமிழ் படத்திற்கு தியேட்டர்களில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், ஏன் என்றால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்ரில் தெலுங்கு,மலையாளம் ஆங்கிலம் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ரிலீஸ் செய்கிறது. இப்போதுகூட நாம் இங்கே போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்கள் மற்ற மொழி படங்களை திரையிட்டு அதில் லாபம் பார்த்துவிடலாம் என நினைக்கின்றனர்.

மற்ற மொழி படத்தினை தமிழ் மொழியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதை நாம் அனுமதிக்க கூடாது, வேணும் என்றால் அந்த மொழியிலேயே ரிலீஸ் செய்துகொள்ளட்டும்,இவ்வளவு பிரச்சனைகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து போராடவேண்டும்.. இவற்றை எல்லாம் நடைமுறைக்கு கொண்டுவர ஒரு மாத காலம் ஆகும் ஆனாலும் இதற்க்கு தீர்வு கொண்டுவந்த பின்னர் கோடை விடுமுறையில் இருந்து புதிய திரையுலகை நாம் ஆரம்பிப்போம் நம்மால் முடியும் என கூறியுள்ளார்.

திரைத்துறையில் இவ்வளவு பிரச்சனை நடக்கிறது ரஜினி,கமல் வாய் திறக்காமல் இருப்பது ஏன்.?ஒவ்வொரு ஆற்றையும் பார்த்துவிட்டு வந்து இது மாசுபட்டு கிடக்குது, இதை சுத்தப்படுத்தனும்னு கமல் சொல்றாரு.. நீங்க வளர்ந்த இந்த இடத்துல இவ்வளவு பெரிய குப்பை மொத்தமா முடங்கிப்போய் கிடக்குது.. இதை யாரு சுத்தப்படுத்துவது..?

இந்த பிரச்சனை பற்றி இருவரும் பேசாமல் இருப்பது வேதனை தருகிறது என கூறியுள்ளார் முதலில் நீங்கள் வளர்ந்த இடத்தை சுத்தம் செய்வது உங்களின் கடமை அல்லவா.? இவர்கள் இருவரும் குரல் கொடுத்தால் 5 நிமிடத்தில் முடிந்துவிடும் பிரச்சனை, தேவைபட்டால் க்யூப் போல புதிதாக நாம் ஒன்றை தொடங்கலாம், இதற்கான முயற்சியை நீங்கள் எடுங்கள்.. உங்கள் பின்னாடி நாங்கள் வர தயாராக இருக்கிறோம்.. இப்போதைய உங்கள் சேவை முதலில் கோடம்பாக்கத்துக்குத்தான் தேவை” என தனது மனதில் உள்ள ஆதங்கம் முழுவதையும் ஒரு தயாரிப்பாளரின் மனநிலையில் இருந்து கொட்டி தீர்த்தார் ஜே.சதீஷ்குமார் ..

ஜே.சதீஷ்குமார்  பேச்சு நடிகர் ரஜினி கமலுக்கு எதிராக உள்ளது போல் இருந்தாலும் உண்மையில், ரஜினி, கமல் இருவரும் தலையிட்டால் இந்த  பிரச்சனைக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைத்து விடும் என்பது அனைவருக்கும் தெரியும்.