அந்த மணியான இயக்குனர் தமிழ் திரையுலகில் நுழைந்த நாள் முதல் புதிய வடிவம் பெற்றது தமிழ் சினிமா.

காசை காசென்று பார்க்காமல் தம்பிக்காக தண்ணீராய் செலவு செய்தார் அந்த இரெண்டெழுத்து தயாரிப்பாளர்..!

ஒரு பெரிய ஹீரோவின் வீட்டில் தம்பிக்காக பேசி பெண் எடுத்தார். பத்து வருடங்கள் தம்பி இயக்க, இரண்டெழுத்து தயாரிப்பாளரான அண்ணன் லட்டு லட்டாக படங்கள் எடுத்தார்.

ஒரு பிரமாண்ட இசையமைப்பாளரை உருவாக்கியதும் தம்பி இயக்குனர் தான்..! எல்லாம் சரி..பிரமாண்டம், தயாரிப்பு எல்லாம்  ஓகே..! போட்ட காசு வந்ததா.? இல்லை..நஷ்டம் தான் வந்தது.

வட்டிக்கு வாங்கினார். பெங்களூரு கைதியின் பினாமியிடம் வட்டிக்கு பணம் வாங்கினார். வட்டியே பல லட்சங்கள்..!

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜோடியாகும் `காளி’ நாயகி...

கடன் பெருகிக் கொண்டே வர.. நொடித்து, நொந்து போய் உட்கார்ந்து விட்டார் இரண்டெழுத்து தயாரிப்பாளர்.

பெங்களூரு சிறைவாசியின்  பினாமி  பெரிய பைனான்சியர். அதிரடி பார்ட்டி. வட்டி கட்ட முடியாதவர்களை நிர்வாணமாக்கி காசை கறந்து விடுவார்.

அந்த பரிதாப அண்ணன் வீட்டுக்குப பைனான்சியரின் அடியாட்கள் போனார்கள். கடன் வசூல் செய்யும் கொலைகார ரவுடிகள் அவர்கள்.  தயாரிப்பாளரை  மானம் கெட்ட கேள்விகள் கேட்டார்கள்.

தயாரிப்பாளர் இடிந்து உட்கார்ந்தார். சொந்த உறவுகளிடம் தான் சம்பாதித்து சேர்த்த   சொத்துக்களை  வைத்து கடனை அடைத்து விடலாம் என்று மன்றாடினார்.   ம்கூம்     உதவ வில்லை. மறுத்து விட்டார்கள்.   கூனிக் குறுகிப் போனார் தயாரிப்பாளர்.

அதிகம் படித்தவை:  96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா ? அவரே சொன்ன பதில்.

தம்பிகளிடம் உதவி கேட்டு கதறினார். யாரும் உதவத்தயாராக இல்லை கடன் காரர்கள் கொடுத்த கெடு நாளையோடு முடிகிறது.

கடைசியாய் நண்பர்கள்..உறவினர்களிடம் பணம் கேட்டார்.  பத்துப் பைசா தர யாரும் தயாராக இல்லை. இரவு முழுக்க அழுதார்.

ஒரு முடிவிற்கு வந்தார். அதிகாலை 4 மணி… எழுந்தார்..சொத்தை விற்றுத் தராத மனைவியை கடைசியாகப் பார்த்தார்.

நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார் மனைவி. வேட்டியை கயிறாக்கினார். தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

பணம் ..பணம் ..பணம்.உறவாவது ஒன்றாவது…!