fbpx
Connect with us

Cinemapettai

தன் படத்தை பார்த்த தயாரிப்பாளர் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

தன் படத்தை பார்த்த தயாரிப்பாளர் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

ajay_krishnan001சமீபகாலமாக திரையுலகத்தினரின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.சாய்பிரசாந்த், பிரதியுஷா என பல சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலையை தொடர்ந்து தற்போது மலையாள தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

இந்த செய்தி மலையாள திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்போது அவருடே ராவுகள் (Avarude Raavukal) என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், ஆசிப் அலி, ஹனி ரோஸ் ஆகியோர் நடிக்க ஷானில் முகமது இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ப்ரிவியூ பார்த்த அஜய் பாக்ஸ்ஆபிசில் வெற்றி பெறுமா என்று கலக்கத்தில் இருந்துள்ளார். 4 கோடி ரூபாய்க்கு மேல் இப்படத்தில் முதலீடு செய்துள்ளதால் கவலையை தனது பெற்றோரிடம் கூறி புலம்பியுள்ளார்.

இந்நிலையில் திடீரென நேற்று தற்கொலை செய்துள்ளார்.இவர் இதற்கு முன் பல மலையாள படங்களில் சின்ன வேடங்களில் தோன்றி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top