Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் பயந்துட்டார், இனி குண்டக்க மண்டக்க பேச மாட்டார்.. மாஸ்டரை சீண்டும் தயாரிப்பாளர்
தளபதி விஜய்யை சினிமாவில் பார்ப்பதைவிட அவர் ஏதாவது நல்ல கருத்து சொல்லிவிட மாட்டாரா என ஏங்குபவர்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றனர். தன்னுடைய ஒவ்வொரு பட இசை வெளியீட்டு விழாவின் போதும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீபத்தில் நடந்த மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அரசியல் பற்றி எந்தக் கருத்துக்களையும் கூறவில்லை. மேலும் விஜய் வீட்டில் இரண்டு முறை நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
20 வருஷத்துக்கு முன்னாடி ரெய்டு இல்லாம நிம்மதியா இருந்தேன் என்பதை மட்டும் கூறி விட்டு அமைதியாகி விட்டார். இதன் பின்னணியில் பெரிய அரசியல் விளையாட்டு இருப்பதாகவும் அதனை கண்டு விஜய் பயந்து விட்டார் எனவும் பிரபல தயாரிப்பாளர் ராஜன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
யூடியூப் சேனல்களை வாழவைக்கும் தெய்வமாக விளங்கி வருபவர் தயாரிப்பாளர் ராஜன். பெரிய நடிகர்கள் சிறிய நடிகர்கள் என்று யாரையும் பார்க்காமல் விட்டு விளாசி விடுவார். அப்படித்தான் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தை தழுவி ஊற்றிவிட்டு விஸ்வாசம் படம் வசூல் செய்தவுடன் அப்படியே மாறி பேசிவிட்டார்.
அதேபோலதான் தற்போது தளபதி விஜய்யை பற்றி கூறியுள்ளார் ராஜன். அவர் கூறியதாவது, சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையால் விஜய் மிகவும் பயந்து விட்டதாகவும், அதனால்தான் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அதனைப் பற்றி பேசவில்லை எனவும் கூறியுள்ளார்.
பெரும்பாலான ரசிகர்கள் இவரின் பேட்டிகளை ஜாலியாக எடுத்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை. இருந்தாலும் பெரிய நடிகர்களை தொடர்ந்து தாக்கி பேசி வருவது நல்லதல்ல என்கிறது கோலிவுட் வட்டாரம்.
