அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்.. மளமளவென வளர்ந்து நிற்கும் அஜித்தின் வாரிசு

அஜித் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வருகிறது. பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அஜித் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். தயாநிதி அழகிரி, அஜித் நடிப்பில் வெளிவந்த அவருடைய 50-வது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தை தயாரித்து இருந்தார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து அவர் மீண்டும் அஜீத்தை சந்தித்து இருக்கிறார். இதனால் மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

மேலும் அதில் தயாநிதி சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டாருன்னு, அவரை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டு அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அஜித் கருப்பு நிற உடையில் மிகவும் அசத்தலாக இருக்கிறார். அவருடன் ஷாலினி, அனோஷ்கா ஆகியோரும் இருக்கின்றனர்.

ajith-shalini
ajith-shalini

அதில் அனோஷ்கா மளமளவென வளர்ந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். சொல்லப்போனால் அவரின் அம்மா ஷாலினியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அழகில் மிளிர்கிறார். இதைப் பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

தற்போது இந்த ஃபேமிலி போட்டோ ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் இது சாதாரண சந்திப்பா அல்லது அடுத்த படத்திற்கான ஏதேனும் திட்டமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போட்டோ சோசியல் மீடியாவில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Next Story

- Advertisement -