Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனரை மாற்ற சொன்ன ஹீரோவிற்கே டாட்டா சொன்ன தயாரிப்பாளர்..
அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் இயக்குனர் சந்தீப் ரெட்டியை மாற்ற சொன்ன நடிகருக்கு டாட்டா காட்டி இருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்கள்.
காதலுக்காக தமிழில் ஆட்டோகிராப், மலையாளத்தில் பிரேமம் என கல்லாகட்டிய படங்களுக்கு இடையில் தெலுங்கில் ட்ரேட் மார்க் செட் செய்தது அர்ஜுன் ரெட்டி திரைப்படம். அத்தனை முத்தங்கள், கோபங்கள், அழுகைகள், சிகரெட்-பீடி புகை மண்டலங்கள், போதை மருந்துகள், பெண்கள், பாட்டில்கள், என அர்ஜுன் ரெட்டியாகவே வாழ்ந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. அவரது காதலியாக ஷாலினி பாண்டே. மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஆந்திராவிற்கு இறக்குமதி ஆகி இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி. ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாத திரைக்கதையால் அப்ளாஸ் வாங்குகிறார். நாயகன் ஒருவர் இருந்தால் அவருக்கு ஒரு நண்பன் இருப்பார்கள் என்பது திரையுலகின் எழுதப்படாத லாஜிக் அல்லவா அதை செவ்வனே செய்து இருக்கிறது நண்பன் சிவா கதாபாத்திரம். அனைத்தும் பக்கா காமிகல். அர்ஜுனைச் சமாளிக்கவும் முடியாமல், கைவிடவும் முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பித் தவிக்கும் காட்சிகள் எல்லாமே சிரிப்பு சரவெடி.

Arjun-Reddy
படமும் மாஸ் ஹிட் அடித்தது. தமிழில் வர்மா என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சியான் விக்ரமின் மகன் துருவ் இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். நாயகி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் முராத் கெதானி, அஸ்வின் வர்தே ஆகியோர் வாங்கினார். விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் முதலில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மகனான அர்ஜூன் கபூரிடம் பேசப்பட்டது. ஆனால், அர்ஜூன் கபூருக்கு சந்தீப் ரெட்டி இயக்குனர் என்பதில் திருப்தி ஏற்படவில்லையாம்.

shahid-arjun
தன்னை வைத்து தேவர் படத்தை இயக்கிய அமித் சர்மாவை சந்தீப்புக்கு பதிலாக இயக்குனராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஆனால், சந்தீப் தான் இயக்க வேண்டும் என முடிவாக இருந்த தயாரிப்பாளர்கள் அர்ஜூனுக்கு டாட்டா காட்டி விட்டார்களாம். அவருக்கு பதில் ஷாகித் கபூர் அர்ஜூன் ரெட்டியாகி இருக்கிறார். அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
