ஷங்கர் படத்தை வெளியிடாமல் தடுத்த ஆளுநர்.. ஜெயலலிதா வீடு வரை சென்ற பஞ்சாயத்து

ஒரு டான்ஸராக இருந்த பிரபுதேவாவுக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்த திரைப்படம் காதலன். அதுவரை ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவா இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்தது. அதாவது இந்தப் படத்தில் ஹீரோயின் நக்மா ஆளுநரின் மகளாக இருப்பார்.

அந்த ஆளுநர் காகர்லா கதாபாத்திரம் அப்போது இருந்த ஆளுநர் சென்னா ரெட்டியை தாக்கும் விதமாக இருந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்தது.

ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக பகையாளியாகவே இருந்தனர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட காதலன் திரைப்படமும் ஆளுநருக்கு எதிரான கதையாக இருந்தது. இதனால் அந்தப் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் ஆளுநரை சார்ந்தவர்கள் ஏகப்பட்ட தொல்லை கொடுத்தனர்.

அதிக பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை கிளம்பியதால் தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஏகப்பட்ட மன உளைச்சலில் இருந்தார். அப்போது அவர் ஏடிஎம்கே கட்சியின் பொறுப்பில் இருந்ததால் முதல்வரை சந்திக்க முடிவு செய்தார்.

அதனால் பட பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் நேராக ஜெயலலிதா வீட்டிற்கே சென்று அவரை சந்தித்திருக்கிறார். ஜெயலலிதாவும் அவரிடம் நீங்கள் படத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டாம். நீங்கள் எடுத்த காட்சிகளை அப்படியே ரிலீஸ் பண்ணுங்க என்று அனுமதி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு படம் வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்