Tamil Cinema News | சினிமா செய்திகள்
வளரும் நேரத்தில் வந்த மோசடி பிரச்சனை.. அதர்வாவுக்கு வந்த சிக்கல்
தற்போதைய தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் முக்கியமான மினிமம் கியாரண்டி நடிகராக கருதப்படுபவர் அதர்வா. மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகனான இவர் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தின் மூலம் திறமையான நடிகர் என்பதை நிரூபித்தார். அதன்பிறகு இரும்புத்திரை, சண்டிவீரன் என தொடர்ந்து படங்களில் நடித்தாலும் ஈட்டி படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
பிறகு பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்த செம போதை ஆகாத திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சம்பளமே இல்லாமல் ஒரு படம் நடித்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது அந்தப் படத்தில் நடிக்க மறுத்த அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் சினிமா வட்டாரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
