வலிமை திரைப்படத்தால் ஏகப்பட்ட நஷ்டம்.. தயாரிப்பாளரை போட்டுக்கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் படம் வெளியாகியுள்ளதால் இப்படத்தை அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

படம் வசூலில் நல்ல லாபம் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து செய்திகள் வெளியானாலும் சிலர் படம் நஷ்டம் என்று கூறி வருகின்றனர். தற்போது தயாரிப்பாளர் கே ராஜன் வலிமை திரைப்படத்தை பற்றி ஒரு அதிரடியான செய்தியை கூறியுள்ளார்.

அதாவது வலிமை திரைப்படத்தை வாங்கிய சென்னை, செங்கல்பட்டு ஏரியா வினியோகஸ்தர்களுக்கு 10% நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற ஏரியாக்களில் 20% நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக இருந்த கே ராஜன் தற்போது கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

அதன் அடிப்படையில் இந்த தகவல் அவருக்கு கிடைத்ததாக கூறும் அவர் வலிமை திரைப்படத்தை பொருத்தவரை அது லாபமா, நஷ்டமா என்று எனக்கு தெரியாது ஆனால் படத்தை வாங்கிய பலருக்கும் இது நஷ்டத்தை கொடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் கூறிய இந்த தகவலை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே அஜித் பற்றி மோசமாக பேசி அவரின் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ப்ளூ சட்டை தற்போது இப்படி ஒரு செய்தியை பகிர்ந்து உள்ளதால் மேலும் அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.

தற்போது வலிமை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் தியேட்டரில் கிடைத்த வரவேற்ப்பை போலவே இதிலும் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இதை குறிப்பிட்டு பேசும் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை நீ அடங்கவே மாட்டியா என்பது போன்ற வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.