தனுஷை ஓரங்கட்ட நினைக்கும் பிரபலங்கள்.. புதிதாக ஸ்கெட்ச் போட்ட ரஜினியின் வட்டாரம்

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இதைக் அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரையும் இணைக்க இருவீட்டார் குடும்பமும் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷை பலரும் மறைமுகமாக தாக்கி வருகின்றனர். தனுஷ் படங்களுக்கு பெரிய அளவில் யாரும் உதவி செய்யக் கூடாது என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளாராம்.

தனுஷின் பட வாய்ப்புகளை தட்டிப்பறித்த அந்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்திற்கு மேல் சென்று தனுஷுக்கு நெருக்கமாக இருக்கும் சக நடிகர்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் தனுஷுடன் கலந்து கொள்ளும் நண்பர்கள் யாரும் தனுஷுடன் இருக்கக் கூடாது என கூறியுள்ளாராம். அந்த தயாரிப்பாளர் மறைமுகமாக தனுஷுடன் நீங்கள் சேர்ந்தால் உங்களுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடையாது என கூறியுள்ளார்.

இதனால் தங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்ற பயத்தால் தனுசுக்கு நெருக்கமாக இருந்த சக நடிகர், நண்பர்கள் தற்போது அவரை விட்டு பிரிந்து உள்ளனர். அந்த தயாரிப்பாளரும், ரஜினியும் மிகவும் நெருக்கமானவர்கள். இவர்தான் சினிமா துறையில் தற்போது பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.

அந்த தயாரிப்பாளரை எதிர்க்க பலரும் பயப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் சொல்வதை தான் நடிகர் மற்றும் இயக்குனர் அனைவரும் கேட்டு வருகின்றனர். அதனால் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் தனுசை மறைமுகமாக தாக்குகிறார். இது ரஜினிக்கு தெரிந்து செய்கிறாரா, இல்லை தெரியாமல் செய்கிறாரா என்பது தெரியவில்லை.

ஏற்கனவே மனைவியை பிரிந்த சோகத்தில் இருக்கும் தனுஷுக்கு தற்போது நண்பர்களின் பிரிவும் மிகப்பெரிய மன வலியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தனுஷ் தன் கவலையை வேறு யாரிடம் சொல்வது என தெரியாமல் தினமும் கோவிலுக்கு சென்று மனக்கவலையை கொட்டி வருகிறார்.

Next Story

- Advertisement -