செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

டாப் 3 ஹீரோஸ் நடிப்பதற்கு தடை, கறார் காட்டும் தயாரிப்பாளர் சங்கம் .. எல்லாம் SK -க்கு சாதகமாவே நடக்குது பா!

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்கிறாரா என்ன தெரியவில்லை. அவருக்கு சாதகமாகவே இப்போது தமிழ் சினிமாவில் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. அமரன் படம் சிவகார்த்திகேயனை புதிய உச்சத்தில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து அவருடைய கைவசம் இருக்கும் படங்கள் கண்டிப்பாக சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அளவில் இருக்கிறது. அதே நேரத்தில் திடீரென தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கும் முடிவை பார்த்தால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதியாக ஆகிவிடுவார் போல.

டாப் 3 ஹீரோஸ் நடிப்பதற்கு தடை

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால், தனுஷ் மற்றும் சிம்பு மூன்று பேருக்கும் ரெட் கார்டு கொடுத்திருக்கிறது. கொடுத்த கமிட்மெண்டை சரியாக நிறைவேற்றாத காரணத்தால், பலமுறை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

அதாவது நடிகர் சிம்பு தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் தக் லைப் படத்திற்குப் பிறகு வேறு எந்த படத்தில் நடிக்க கூடாது. அதே மாதிரி நடிகர் தனுஷ் இட்லி கடை படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் மீது இருக்கும் புகார்கள் எல்லாம் சரி செய்யப்பட்ட பிறகு தான் அடுத்து படத்தில் ஒப்பந்தமாகி நடிக்க வேண்டுமாம். அதே மாதிரி விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது பண மோசடி செய்ததாகவும், அதற்கு விளக்கம் கொடுத்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

Trending News