நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டபோது, நடிகர்களுக்கு நல்லது செய்வேன், நடிகர் சங்கம் கட்டுவேன் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதி களை வழங்கித்தான் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றது விஷால் அணி. ஆனால் அதில் ஓரிரு விசயங்கள் தவிர இன்னும் எந்த முக்கிய விசயங்களையும் அவர்கள் செய்யவில்லை என்பதுதான் நடிகர் நடிகைகளின் கருத்தாக உள்ளது. முக்கியமாக, நடிகர் சங்கம் கட்ட இன்னும் ஒரு செங்கலைகூட எடுத்து வைக்காத நிலையில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என்று விஷால் கூறி வருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தநிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால், கோடம்பாக்கத்தில் நடக்கும் அனைத்து படங்களின் ஆடியோ விழாக்களிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். இந்த திடீர் மாற்றம் குறித்து கேட்பவர்களிடத்தில், தான் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் இப்படித்தான் இருப்பேன். நான் சம்பந்தப் படாத படமாக இருந்தாலும் அதை விளம்பரப்படுத்துவதை எனது நோக்கமாக கருதுவேன். இன்னும் 2 வருடங்களுக்கு இப்படித்தான் இருக்கப்போகிறேன் என்கிறார் விஷால்.