தமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஒன்றரை ஒரு மாதகாலமாக எந்த புது படமும் ரிலீஸ் ஆகவில்லை ஆம் கடந்த ஒன்றரை மாதமாக ஸ்ட்ரைக் நடந்து வருகிறது அதனால் படபிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது பல படங்கள் படபிடிப்பு தொடங்கி அப்படியே நிற்கின்றன.

vishal

தயாரிப்பாளர்கள் இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்துவருகிறார்கள் மேலும் படத்தை ஒளிபரப்பி வந்த டிஜிட்டல் தொழில்நுட்ப கியூப் க்கு இனி படத்தை ஒளிபரப்பும் வாய்ப்பு இனி கிடைக்காது. அதை விட பாதி விலைக்கு ஒலிபரப்பு செய்கிறோம் என கூறி ஏரோஸ் நிறுவனம் முன்வந்துள்ளது தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதேபோல் படத்தை ரிலீஸ் செய்வதிலும் ஒரு புதிய முறையை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது, அதன் படி இனி படம் சென்சார் ஆன தேதியை வைத்து படத்தின் ரிலீஸ் தேதி கொடுக்கப்படும் பெரிய நடிகர்கள் படமாக இருந்தாலும் சரி சிறிய நடிகர் படமாக இருந்தாலும் சரி சென்சார் தேதியை பொறுத்தே படத்தின் ரிலீஸ் தேதி வழங்கப்படும் என முடிவெடுத்துள்ளார்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் எனவே பல தயாரிப்பாளர்கள் சிறிய பட தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.