Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அப்பாவுக்கு விபூதி அடித்த தயாரிப்பாளர்.. விஸ்வரூபம் எடுக்கும் அழகிய தமிழ்மகன் விவகாரம்
2007 ஆம் ஆண்டு முதன்முதலாக விஜய் இரட்டை வேடங்களில் நடித்த அழகிய தமிழ் மகன் என்ற படம் வெளியானது.
விஜய்யின் சினிமா வரலாற்றில் அழகிய தமிழ் மகன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அழகிய தமிழ் மகன் படத்தை ஸ்வர்க்க சித்ரா அப்பச்சன் என்பவர் தயாரித்திருந்தார். மேலும் இதே படத்தில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் ஒரு கோடிக்கும் மேல் பணம் போட்டு இருந்தாராம்.
அந்த படம் நஷ்டம் அடைந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சந்திரசேகர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் அப்பச்சன் எதையும் கண்டுகொள்ளாத நிலையில் சந்திரசேகர் உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில் தற்போது அப் பச்சனுக்கு 3 மாதம் சிறை தண்டனை கொடுத்து உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருக்கும் விஜய்யின் அப்பாவுக்கு விபூதி அடித்த தயாரிப்பாளரை கண்டு கொஞ்சம் அச்சத்தில் இருக்கிறதாம் கோலிவுட்.

sa-chandrasekhar
