விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி சினிமாவில் பெரிய விஷமாக இருக்கும் திருட்டு டிவிடியை ஒழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பார் சுரேஷ்காமாட்சி பேசும்போது, தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு தான் படம் எடுக்கிறார்கள்.

சில படங்களுக்கு காலை காட்சிக்குகூட கூட்டம் வருவதில்லை, ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.அதை விட்டுவிட்டு ஓடும் பஸ்ஸை நிறுத்தி திருட்டு டிவிடி இருக்கா என்று செக் பண்ணுவது சரியல்ல. நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டாலே போதும் சினிமா பிழைத்துக் கொள்ளும் என்றார்.