விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே மற்றும் ராம்கி நடித்த இணைந்த கைகள், கருப்பு ரோஜா உள்பட பல திரைப்படங்களை தயாரித்த ஆபாவாணன் காசோலை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் மீதும் பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது.

இதில் காசோலை முறைகேட்டில் ஆபாவாணன் உள்பட 3 பேரும் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2.40 கோடி அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பு கோலிவுட் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.