fbpx
Connect with us

Cinemapettai

தல 61 படத்தை தயாரிக்கிறோமோ? விளக்கம் கொடுத்த விஜய் பட தயாரிப்பாளர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல 61 படத்தை தயாரிக்கிறோமோ? விளக்கம் கொடுத்த விஜய் பட தயாரிப்பாளர்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியுடன் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் படமான இதன் படப்பிடிப்பு 50% நிறைவடைந்துள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக ஷூட்டிங் தள்ளி போனது.

இந்நிலையில் இணையத்தில் தல நடிக்கும் அடுத்த ப்ரொஜெக்ட் பற்றிய விஷயங்கள் கிசுகிசுக்கப்பட்டது. விஷ்ணு வர்தனுடன் அஜித் கூட்டணி வைக்கவில்லை, சரித்திரப்படமும் கிடையாது என்றனர்.

மேலும் இறுதி சுற்று, சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் சுதா கொங்கரா தல அஜீத்தை சந்தித்து கதை கூறியுள்ளார் எனவும் அந்த கதையில் சில மாற்றங்களை செய்தால் போதும் என தல கூறியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறைமுகமாக இது அனைத்தும் வதந்தியே என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Archana Kalpathi tweet

“நாங்கள் 2020-ம் ஆண்டுக்கான எந்த ஒரு திரைப்பட தயாரிப்பு திட்டத்திலும் கையெழுத்திடவில்லை. சில தவறான செய்திகள் வலம் வருகின்றன. அதனால் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக நான் விளக்கம் தந்திருக்கிறேன்” என சொல்லியுள்ளார்.

Continue Reading
To Top