ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் நடித்துவரும் 2.O படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை பொலிவியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அங்கு தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணத்தால் இதன் படப்பிடிப்பு தள்ளிபோய் உள்ளது.