இயக்குனர் சுந்தர்.சி’யின் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பழம் பெரும் திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். 1978ல் வெளியான ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையைதான் அரண்மனை என்ற பெயரில் சுந்தர்.சி படமாக்கியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இப்போது சுந்தர்.சி படத்தின் கதைக்காக 10 லட்சம் தர ஒப்புக்கொண்டுள்ளதால், இருவரும் சமரசம் செய்துகொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதற்காக இருவரும் பிப்ரவரி 1-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி சமரச பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here