ஜெ.மறைவிற்கு பிறகு சசிகலா சிறை சென்றது, தினகரன் கட்சியை கபளீகரம் செய்தது கொண்டது என அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன.

இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலமாக தினகரன் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஓட்டுக்கு பணம் கொடுத்தது, இரட்டை இலையைக் கைப்பற்ற லஞ்சம் கொடுத்தது என பல்வேறு புகார்களில் சிக்கினார்.

இதனை தொடர்ந்து தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த ஓபிஎஸ் அடுத்து ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

டிடிவி தினகரன் மற்றும் இளவரசி மகன் விவேக் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவியை முடக்க ஓபிஎஸ் கோரிக்கை வைக்கப் போவதாக தெரிகிறது.

அதாவது இரட்டை இலை சின்னத்துடன் இருக்கும் ஜெயா டிவி லோகோவை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க போவதாக கூறப்படுகிறது.

மேலும் ஒபிஎஸ்&இபிஎஸ் அணிகள் இணைப்பிற்கு தற்போது முட்டுக்கட்டையாக இருப்பது ஜெயா டிவியும், நமது எம்ஜிஆர் நாளேடும் தான் என்று கூறப்படுகிறது. தினகரனுக்கு ஆதராவான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே ஜெயா டிவி என்ற பெயரையும், இரட்டை இலை லோகோவையும் பயன்படுத்த அதிமுக அணிகள் தடை விதிக்க கோருவது என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக விரைவில் எங்கள் குரல் ஒலிக்க இருக்கிறது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.