நம்ம தலையோட விவேகம் படம் ஆக. 10ம் தேதி வெளியிடறதா இருந்துச்சுங்க. இதே போல VIP-2 திரைப்படம் தனுஷ் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆக இருந்துச்சு, சிவகார்த்திகேயன் நடிப்புல உருவாகியுள்ள வேலைக்காரன் படமும் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருந்துச்சு.

ஆனால் இப்போ VIP-2 ரிலீஸ் தேதி ஆகஸ்ட் இரண்டாம் வாராம்  தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவேகம் மற்றும் வேலைக்காரன் படத்தோட ரிலீஸ் தேதியும் தள்ளி போயிருக்கு… இதுக்கு காரணம் தணிக்கை குழுவில் செய்யப்பட்ட சில மாற்றங்கள்தாங்க..

அதிகம் படித்தவை:  ரஜினி இடத்தில் அஜித்தா? விஜய்யா ? - யார் இடம் பிடிப்பார்?

ஓரிரு நாட்களில் தணிக்கை குழு சான்றிதழ்கள் வழங்கி வந்துகொண்டிருந்தது… ஆனால் அதிலும் தற்போது லஞ்சம் கொடுக்கப்பட்டு உடனடியாக சில தயாரிப்பாளர்கள் சான்றிதழ்கள் வாங்கிவிடுகிறார்கள்… இதை தடுக்க தணிக்கை அதிகாரி இப்போது சில புதிய திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்….

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் படத்தால் பாதிக்கப்படும் வேலை வாய்ப்பு - வம்பு பேசும் திரையுலக பிரபலம்

அதன்படி இனி ஆன்லைனில் மட்டுமே திரைப்பட சான்றிதழ்கள் விண்ணப்பிக்க முடியும், மேலும் வரிசைப்படி மட்டுமே திரைப்படங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும், மேலும் பல கிடுக்கிப் பிடி சட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளது….

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: GST பிரச்சனைல இதுவேறையா?