Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு

viswasam-release

விஸ்வாசம் படத்திற்கு தடை

சிறு பட்ஜெட் படங்களில் ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்து படங்களுக்கும் படம் ரிலீஸ் நேரத்தில் பிரச்சினைகள் வருவது பெரிய ஏமாற்றத்தை தருகிறது.

தற்போது அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை மூன்று ஏரியாக்களில் வெளியிட கோர்ட் தடை விதித்துள்ளது. அதனால் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற மூன்று முக்கிய ஏரியாக்களில் படம் வெளிவருவது சந்தேகம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பைனான்சியர் உமாபதிக்கு வரவேண்டிய 78 லட்ச ரூபாய் கடன் பிரச்சினையால் வழக்கு தொடர்ந்தார். அவருடைய பணத்தை இன்று 35 லட்ச ரூபாயும் மீதமுள்ள பணத்தை நான்கு நாட்களில் தருவதாக விநியோகஸ்தர்கள் கூறினார்கள், ஆனால் படம் ரிலீஸ் ஆனால் பணம் வருமா என்று தெரியவில்லை, அதனால் இந்த கடன் பிரச்சினையால் விஸ்வாசம் படத்தை மூன்று இடங்களிலும் தடை செய்துள்ளது.

இதனை மனுவாக தாக்கல் செய்தால் இந்த பிரச்சினை இன்று மதியம் விசாரணைக்கு வரும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கோவை திருப்பூர் ஈரோடு ஆகிய மூன்று இடங்களிலும் தடையை நீக்க கோரி விநியோகிஸ்தர் சாய்பாபா மேல்முறையீடு செய்துள்ளார் . இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது. அதனால் படம் வெளிவருமா என்பது சந்தேகம் தான். விரைவில் தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top